முகப்பு
தமிழ்நாடு

துடியலூர் அருகே யானை தாக்கி பெண் பலி

கோவை மாவட்டம் வடக்கு வட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  துடியலூர்  அருகே  வரப்பாளையம் கிராமத்தில் இன்று காலை ஒற்றை யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
கோப்புப்படம்
பகிர்:

கோவை மாவட்டம் வடக்கு வட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  துடியலூர்  அருகே  வரப்பாளையம் கிராமத்தில் இன்று காலை ஒற்றை யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 ஆனைகட்டி மலை அடிவாரங்களில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள்  புகுந்து விடுகின்றன. 

செவ்வாய்க்கிழமை அதிகாலை இப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த  ஒற்றை யானையானது பாப்பநாயக்கன்பாளையம் வரப்பாளையம் பிரிவு அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த 45 வயதுடைய ஒரு பெண்ணை தாக்கியது. அதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த கோவை நகர வனத்துறையினர் சம்பவ இடத்தில் வந்து பார்வையிட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.