தமிழ்நாடு

ஆலங்குடி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயலில் சேதமடைந்த வீட்டைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சின்னராஜா (45). பெயிண்டிங் தொழிலாளியான இவரது வீடு கஜா புயலில் சேதமடைந்துள்ளது. வீட்டைச் சீரமைத்து தர அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால், வீட்டை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தி தோப்புக்கொல்லை அருகே சுமார் 100 அடி உயரமுள்ள செல்லிடப்பேசி உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். 

தகவலறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி மற்றும் போலீஸார் சின்னராஜாவிடம் 3 மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, செல்லிடப்பேசி கோபுரத்திலிருந்து சின்னராஜா கீழே இறங்கியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT