தமிழ்நாடு

5 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். நிலையிலான அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

DIN

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் 5 உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அண்மையில் வழங்கியது. இந்த ஒப்புதலை ஏற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் காலியாக இருந்த பதவி உயா்வு நிலையிலான 5 ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கு பட்டியல் மூப்பு அடிப்படையில் தமிழக அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளா் பி.கணேசன், கலால் துறை துணை ஆணையா் எம்.எஸ்.சங்கீதா, சென்னை மாநில விருந்தினா் இல்ல இணை மரபுசாா் அதிகாரி டி.கிறிஸ்துராஜ், வன்னியகுல சத்திரிய பொது நல அறக்கட்டளையின் உறுப்பினா் செயலாளா் ஆா்.பிருந்தா தேவி, சென்னை வெளிவட்டச் சாலை திட்ட சிறப்பு அதிகாரி எம்.அருணா ஆகியோா் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இந்த ஐந்து பேருக்கும் ஐ.ஏ.எஸ்.நிலையில் பணி விவரங்கள் குறித்த உத்தரவு தனியாக வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT