தமிழ்நாடு

சங்கமேஸ்வரர் கோயில் கோசாலையிலிருந்து 13 கிராம கோயில்களுக்கு பசுக்கள் தானம்

DIN

பவானி சங்கமேஸ்வரர் கோயில் கோசாலையில் பாரமரிக்கப்பட்டு வந்த 13 பசுக்கள் பல்வேறு பகுதியில் உள்ள கிராம கோவில்களுக்கு தானமாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இக்கோயிலில் பக்தர்கள் அளித்த 16 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இடநெருக்கடி காரணமாக கோயில்களில் பசுக்களை வைத்து பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில், சமயம் சார்ந்த நிறுவனங்கள்,  திருமடங்கள்,  அரசு அங்கீகாரம் பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள், திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்து வரும் நம்பகத் தன்மையுடைய மன்றங்கள் மற்றும் அரசால் இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக பெறுபவர்களுக்கும் திருக்கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக பெறப்படும் கால்நடைகளை இலவசமாக பராமரிப்புக்காக வழங்கலாம்.

கிராமப்புறங்களில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

இதன்பேரில், பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 16 கால்நடைகளில் 13 கால்நடைகள் கிராமக் கோயில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

அந்தியூர் எண்ணமங்கலம் வெங்கடேசப்பெருமாள் கோயில், தோட்டக்குடியாம்பாளையம் வேதீஸ்வரர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சின்னப்புலியூர் முத்துக்குமாரசாமி கோயில், பட்லூர் சொக்கநாத சுவாமி திருக்கோயில், கூனக்காபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோயில், சின்னப்புலியூர் ஏரிமுனியப்ப சுவாமி கோயில், ஒரிச்சேரி அண்ணமார் சுவாமி கோயில், வேம்பத்தி சித்தகவுண்டன்பாளையம் சித்தி விநாயகர் கோயில், வை.ராமநாதபுரம் சக்தி மாரியம்மன் கோயில், சின்னப்புலியூர் காளியம்மன் கோயில், ஜம்பை முத்துமாரியம்மன் கோயில், மணியன்காட்டூரில் உள்ள இரு கோயில்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பசுக்களை பூசாரிகளிடம்  வழங்கினார். பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சபர்மதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT