முகப்பு
தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, 
வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதனால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருமாறும் அளவிற்கு வீரியம் கொண்டது இவ்வாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →