சென்னையில் 10,000-க்கும் கீழ் குறைந்தது கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9,966 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9,966 ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 1,54,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,046 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,41,612 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 9,966 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
மேலும், மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரத்தில், கோடம்பாக்கத்தில் 1,215 பேரும், அண்ணா நகரில் 1,053 பேரும், அம்பத்தூரில் 768 பேரும், அடையாறில் 865 பேரும், வளசரவாக்கத்தில் 684 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.