தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.                  

ஈரோடு  மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி, 

கரோனா பரவல் உள்ள சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். பள்ளிகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும். தமிழகத்தில் 15 இடங்களில் துவக்கப்பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் துவங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT