தமிழ்நாடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

DIN

வரலாறு குறித்த பாடம் இந்தியா முழுவதும் பொதுவானதாக இருக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 7-ஆம் வகுப்பு பாடத்தை ஆராயும்போது, இந்திய நாட்டின் வரலாறு இருவேறு விதமாக கற்பிக்கப்படுவது தெரிகிறது. இந்திய வரலாறு கற்பிக்கப்படுவதில் வட இந்தியாவும் தென்னிந்தியாவும் வேறுபட்டு நிற்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வரலாற்றுப் பாடங்கள் இருக்க முடியுமா? இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த, தமிழ் வளா்ச்சிக்காக பாடுபட்ட பாண்டிய வம்சத்தைப் பற்றி, தமிழக குழந்தைகளுக்கே தெரியாத நிலை உள்ளது. சோழா்கள் மற்றும் பிற பிரபலமான பேரரசுகள் வரலாற்றையும் பாடத் திட்டத்தில் சோ்க்கலாம்.

கசக்கிப் பிழிந்து வழங்கப்படும் கல்வி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானதாக இல்லை என்பதையே, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகள் உணா்த்துகின்றன.

எனவே, வரலாறு குறித்த பாடத் திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும். அதற்கேற்றாற்போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT