தமிழ்நாடு

கம்பத்தில் கழிவுநீர் தெருவில் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளத்தெருவில் பாலம் இடிந்துள்ளதால், சாக்கடை கழிவுநீர் தெருவில் செல்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் 9 வது வார்டு தாத்தப்பன் குளத்தெருவில் பாலம் இடிந்துள்ளது. இதில் செல்லும் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஒடுகிறது.  

இதனால் தெருவில் உள்ள சிறுவர், சிறுமியர் கழிவு நீரை மிதித்து நடந்து செல்கின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவில் செல்லும் கழிவுநீரை அப்புறப்படுத்தி  நோய்த்தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகப்பன் குளம் ஒன்பதாவது தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT