தமிழ்நாடு

ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: சேகா் ரெட்டி மீதான வழக்கு முடித்து வைப்பு

DIN

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகா் ரெட்டி வீட்டில் இருந்து, ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலதிபா் சேகா் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக சேகா் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள் 6 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டது தொடா்பான வழக்குகள் மட்டுமே சேகா் ரெட்டி மீது நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு, சென்னை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவா்கள் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹா், சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT