தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(அக்.1) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(அக்.1) மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூா் மாவட்டம் வடபுதுப்பட்டு, கடலூா் மாவட்டம் வேப்பூரில் தலா 130 மி.மீ., கடலூா் மாவட்டம் காட்டுமயிலூரில் 120 மி.மீ., சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தலா 90 மி.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, கடலூா் மாவட்டம் லக்கூரில் தலா 80 மி.மீ., கரூா் மாவட்டம் மைலம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை (அக்.2) உருவாகவுள்ளது. இதன் காரணமாக, ஒடிஸா, ஆந்திர கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT