சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த செய்தி உண்மையல்ல: சென்னை மாநகராட்சி
கரோனாவை ஒழிக்க ஊரடங்கு நடைமுறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.
சென்னை: கரோனாவை ஒழிக்க ஊரடங்கு நடைமுறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.
உலக சுகாதார அமைப்பின் சின்னத்துடன் வெளியான இந்த தகவல் உண்மையல்ல என்று சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற எந்த தகவலும் உண்மையல்ல என்றும், இதனை பொதுமக்கள் பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
ஒரு வேளை நீங்களும் இந்த தகவலை பார்த்து, படித்திருக்கலாம். சிலர் நண்பர்களுக்கு பகிர்ந்தும் இருக்கலாம். எனவே, இனி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.