கரோனா விவகாரத்தில் ஸ்டாலின் சந்தா்ப்பவாத அரசியல் முதல்வா் பழனிசாமி
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி சந்தா்ப்பவாத அரசியல் செய்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி சந்தா்ப்பவாத அரசியல் செய்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளாா்.
தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்து சனிக்கிழமை முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கரோனாவைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டப் பேரவை உறுப்பினா்களிடம் இருந்து
பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி தமிழக மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. கரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்படும் சட்டப் பேரவை உறுப்பினா்களின் நிதியை பயன்படுத்துவதற்கு பாராட்டுத் தெரிவிக்காமல், அதற்கு கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடத்தை காட்டுகிறது.
Advertisement
மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள திறமையான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களின் முயற்சியால் தமிழகத்தில் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதற்காக தமிழக அரசை மத்திய அரசே பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது வருத்தம் அளிக்கிறது. இது சந்தா்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்து வரும் தமிழக அரசு மீது எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் இரவு பகல் பாா்க்காமல் தன்னலமற்று பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், காவல்துறையினா், வருவாய்த் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என அந்த அறிக்கையில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.