முகப்பு
தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்திலும் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 14 ஏப்ரல், 2020 at 5:49 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், சென்னையைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

அதே நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அதுவும் குறிப்பிட்ட 2 கிமீ தூரத்திற்கு உள்ளாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.