சென்னையில் அம்பத்தூருக்கும் பரவியது கரோனா தொற்று: ஒருவருக்கு பாதிப்பு
சென்னையில் இதுவரை கரோனா தொற்று இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் இதுவரை கரோனா தொற்று இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை புதன்கிழமை காலை நிலவரப்படி 358 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 55 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை கரோனா தொற்று இல்லாத அம்பத்தூர் மண்டலத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது.
Advertisement
சென்னையில் 358 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 116 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 42 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை மணலி மண்டலத்தில் மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை.. மண்டல வாரியாக..
திருவொற்றியூர் - 12
மணலி - 0
மாதவரம்- 3
தண்ட்டையார்பேட்டை - 46
ராயபுரம் - 116
திருவிக நகர் - 42
அம்பத்தூர் - 1
அண்ணா நகர் - 27
தேனாம்பேட்டை - 42
கோடம்பாக்கம் - 35
வளசரவாக்கம் - 9
ஆலந்தூர் - 7
அடையார் - 7
பெருங்குடி - 8
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1