முகப்பு
தமிழ்நாடு

கரோனா? நெல்லை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் இளைஞர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 

Updated On : 11 மார்ச், 2020 at 1:05 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் இளைஞர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 

துபையிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் சொக்கம்பட்டி வந்துள்ள இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

கடந்த பிப்ரவரி 28ம் தேதி துபையில் இருந்து திரும்பிய ஜெய்ப்பூரைச் சேர்ந்த 85 வயது நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.