முகப்பு
தமிழ்நாடு

அரசியல் மாற்றம்: கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை- நடிகர் ரஜினிகாந்த் 

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Updated On : 12 மார்ச், 2020 at 8:40 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:39 PM


சென்னை: அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தனது அரசியல் திட்டம் குறித்து சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அறிவித்தார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement

முதலில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுவே.

அதன்படி மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சியில் குறிப்பிட்ட அளவிலேயே தலைவர் பதவிகள். இரண்டாவது, அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு. மூன்றாவது ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது. கட்சித் தலைமையில் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் எந்த வகையிலும் தலையிட மாட்டார்கள். நல்ல தலைவர்களைக் கொண்ட மாற்று அரசியலைக் கொண்டு வர விரும்புகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.