இதெல்லாம் தலைக்கனம் தவிர வேறென்ன?: மத்திய அரசு மீது கமல் காட்டம்
இதெல்லாம் தலைக்கனம் தவிர வேறென்ன? என்று மத்திய அரசு மீது கமல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சென்னை: இதெல்லாம் தலைக்கனம் தவிர வேறென்ன? என்று மத்திய அரசு மீது கமல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய் மாலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன?. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு!
Advertisement
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.