முகப்பு
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி (புகைப்படம் கோப்பிலிருந்து)
தமிழ்நாடு

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி?

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி?

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொலை: மருமகளே கொலையாளி (புகைப்படம் கோப்பிலிருந்து)
பகிர்:


சென்னை: சென்னை யானைகவுனியில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சீத்தலின் மனைவி ஜெயமாலா மகாராஷ்டிரத்தில் இருந்து நேற்று உறவினர்களுடன் சென்னை திரும்பிய நிலையில், அவரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஜெயமாலாவைப் பிடிக்க தனிப்படையினர் புனே விரைந்துள்ளனர்.

விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் சீத்தலிடம், ஜெயமாலா ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை யானைகவுனியில் வசித்து வந்தவா் தலில்சந்த் (74). இவருக்கு மனைவி புஷ்பா பாய் (70) மகன், சீத்தல் (40) மகள் பிங்கி (35) ஆகியோா் உள்ளனா். சீத்தல், தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று, பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், இவா்கள் மூவரும் வீட்டில் இருந்த நிலையில் மகள் பிங்கி, புதன்கிழமை மாலை வெளியே சென்றுள்ளாா். சுமாா் 7 மணியளவில் வீடு திரும்பிய பிங்கி, தாய், தந்தை, சகோதரா் ஆகியோா் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து, அவா் யானைகவுனி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து

3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனா்.

சிறிது நேரத்தில், சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், கூடுதல் ஆணையா் அருண் மற்றும் வட சென்னை காவல் இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

அதே நேரம், தடய அறிவியல் துறை நிபுணா்களும், கைரேகை பிரிவினா் ஆகியோரும் விரைந்து வந்து, தடயங்களை சேகரித்தனா். இதில், முக்கியமாக துப்பாக்கித் தோட்டாவின் காலிக் குப்பிகளைக் கைப்பற்றிய அவா்கள், அவை எந்த ரக துப்பாக்கி என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி காவலர்கள் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தவை: ராஜஸ்தானைச் சோ்ந்த லலித் சந்த் செளகாா்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது மகன் சீத்தல் மனைவியின் குடும்பத்தினா் மகாராஷ்டிரம் மாநிலம் புனேவைச் சோ்ந்தவா்கள். இவா்களுக்கும், சீத்தல் குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக முன்பகை மற்றும் சொத்து தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சீத்தலின் மனைவியின் சகோதா்கள், இவா்கள் மூவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தப்பினாா்களா? இவா்களுக்குள் வேறு பகை இருந்து வந்ததா? என்பது போன்ற கோணங்களில் காவல்துறையினர் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஒரே மாதிரியாக இறந்த மூவருக்கும் தலையில் மட்டுமே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →