முகப்பு
தமிழ்நாடு

'அயன்' பட பாணியில் 4 கிலோ தங்கம் கடத்தல்: மூவர் கைது

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் பட பாணியில் துபையில் இருந்து 4.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மூவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
'அயன்' பட பாணியில் 4 கிலோ தங்கம் கடத்தல்: மூவர் கைது
பகிர்:


சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் பட பாணியில் துபையில் இருந்து 4.1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மூவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

துபையில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

துபையில் இருந்த வந்த விமானத்தில் 14 பயணிகளை சோதனை செய்து விசாரணை நடத்தியதில், மூன்று பேர் அயன் பட பாணியில் தங்களது வயிற்றுக்குள் தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.

Advertisement

அவர்களிடம் இருந்து ரூ.2.16 கோடி மதிப்புள்ள 4.14 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments