முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 3,914 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,87,400 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 56 பேர் (அரசு மருத்துவமனை -27, தனியார் மருத்துவமனை -29) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,642 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 4,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,37,637 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 39,121 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 90,286 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 89,46,566 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 126 என மொத்தம் 192 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.