தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,290 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
சென்னையில் மட்டும் இன்று 1188 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது. 
இன்று 12 பேர் உள்பட இதுவரை 12,700 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,715 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,61,424 பேர் குணமடைந்துள்ளனர். 
இன்றைய நிலவரப்படி 18,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது அலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. 
முகக் கவசம் அணிவதை பலரும் பெரிதாக விரும்பாத காரணமே பாதிப்பு இந்த அளவிற்கு மீண்டும் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. 
முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் எப்படிஇருக்கும் என்ற அச்சமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT