உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நூறு சதவீத வாக்குகளை இலக்கு நோக்கி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கிராமிய கலைஞர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உசிலம்பட்டி பேருந்து நிலையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் முக்கிய வீதிகளில் சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் செய்து கிராம கலைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டு தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில், உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, வருவாய் அலுவலர் சுந்தரப்பெருமாள், மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.