தமிழ்நாடு

குள்ளப்பகவுண்டன்பட்டி:  திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ரூ 8,71,500 பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

DIN

கம்பம்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்த ரூ. 8,71,500  பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் உள்ளிட்ட 3 பேர்  மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்குள்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி பிள்ளையார் கோவில் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படை - 2 க்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படை தேர்தல் பிரிவு அதிகாரிகள் வருவதை அறிந்தவர்கள் பணத்தை சாலையில் வீசி விட்டு தப்பி சென்றனர், அப்போது,  அலுவலர்கள் சாலையில் கிடந்த பணம் ரூ. 8 லட்சத்து 71 ஆயிரத்தை கைப்பற்றி உத்மபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜேம்ஸ்ஜெயராஜ், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன், கிளைச்செயலாளர் குணசேகரன், நிர்வாகி மனோகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT