Youth stabbed to death
திருச்சி: தொட்டியம் கோவில் திருவிழாவில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் வட்டம் தொட்டியம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கொசவம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த ஈரோட்டைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குமார் (18) என்பவரை தொட்டியம் தெற்கு ரத வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்
இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது உடலை தொட்டியம் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரசனை ஏற்படா வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.