முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கரோனா பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக 3, 500-ஐத் தாண்டியதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,03,479 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 1,335 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1,842 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 8,66,913 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 23,777 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டு இதே தினத்தில் புதிதாக 86 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments