முகப்பு
மனைவி பி.ஜான்சிராணியுடன் சென்று வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு

பண பலத்தையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெறும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியின் பண பலத்தையும் மீறி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
மனைவி பி.ஜான்சிராணியுடன் சென்று வாக்களித்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
பகிர்:

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியின் பண பலத்தையும் மீறி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள சிதம்பரம் நகரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தனது மனைவி பி.ஜான்சிராணியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களித்துள்ளனர். இந்த எழுச்சியை பார்க்கும் தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் பரப்புரைக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது இதே நிலைமைதான் உள்ளது. ஒரு பக்கம் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்குள்ள எழுச்சியைத் தாங்கிக் கொள்ளமுடியாத ஆளுங்கட்சி அதிமுக, பாஜக கூட்டணியின் மிகச் சரளமாகப் பணத்தைக் கொடுத்துள்ளார்கள். 

அந்த பண பலத்தையும் மீறி இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் ஆணையம்தான் ஏப்.6-ம் தேதி தேர்தலை நடத்திவிட்டு, மே 2-ம் தேதி வரை நாம் காத்திருக்கக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளார்கள். இதையே கடைசிக் கட்ட தேர்தலை நடத்தியிருந்தால், ஒரு வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் தெரிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும். 

தேவையில்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்கக்கூடிய நிலையைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது மிகுந்த வருத்தத்துக்குரியது. இதனால் சந்தேகம் ஏற்படக்கூடிய நிலையும் உருவாகியுள்ளது. எனவே அடுத்தடுத்த தேர்தல்களிலாவது இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →