நாமக்கல்லில் தங்கக்காசு டோக்கன் விநியோகம்: திமுக-அதிமுக இடையே மோதல்
நாமக்கல் கோட்டை சாலையில் வாக்காளர்களுக்கு தங்கக் காசு அளிப்பதற்கான டோக்கன் விநியோகம் செய்ய திமுகவினர் முற்பட்ட தகவலறிந்து அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் வாக்காளர்களுக்கு தங்கக் காசு அளிப்பதற்கான டோக்கன் விநியோகம் செய்ய திமுகவினர் முற்பட்ட தகவலறிந்து அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். சாலைகளில் டோக்கன்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் கோட்டை சாலையில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு தங்கக்காசு வழங்குவதற்கான டோக்கன் வழங்க திமுகவினர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவினர் திமுகவினர் வழங்கிய தங்கக்காசு வழங்குவதற்கான டோக்கன்களை பறிமுதல் செய்து தெருக்களில் கிழித்து எறிந்து வீசி சென்றனர்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த திமுகவினர் அப்போது டோக்கன்களை கிழித்து எறிந்து வீசியதை தடுத்ததால் அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்கக்காசு வழங்குவதற்கான டோக்கன்களை கிழித்து சாலையில் எறிந்ததால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் மோதலில் ஈடுபட்ட அதிமுக - திமுகவினரை சமாதானப்படுத்தும் காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார்.