முகப்பு
தமிழ்நாடு

தங்கம் சவரனுக்கு ரூ.608 உயர்வு

சென்னையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
தங்கம் சவரனுக்கு ரூ.608 உயர்வு
பகிர்:


சென்னையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி மீண்டும் 34 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 அதிகரித்து, ரூ.34,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.76 உயர்ந்து, ரூ.4,334 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து, ரூ.70.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.70,900 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,334

1 சவரன் தங்கம்...............................34,672

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி.............................70,900

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,258

1 சவரன் தங்கம்...............................34,064

1 கிராம் வெள்ளி.............................69.30

1 கிலோ வெள்ளி.............................69,300
 

முழு கட்டுரையைப் படிக்க →