சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 
தமிழ்நாடு

சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னையில் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 9,755 ஆக உயர்ந்துள்ளது.

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 9,755 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,56,359 ஆக உயர்ந்துளள்து. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,324 ஆக உள்ளது.

கரோனா பாதித்து சிகிச்சையில் 9,755 பேர் உள்ளனர். இதுவரை, கரோனாவுக்கு 4,280 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1114 பேரும், தேனாம்பேட்டையில் 1090 பேரும் உள்ளனர்.

இதற்கடுத்த இடங்களில் கோடம்பாக்கமும் இராயபுரமும் தலா 940 நோயாளிகளுடன் இடம்பிடித்துள்ளன. திருவிகநகர், அம்பத்தூர் தொகுதிகளில் தலா 800 என்ற அளவில் கரோனா நோயாளிகள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில், தற்போது சிகிச்சையிலிருப்போர் விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மண்டலவாரியாக கரோனா நிலவரம்..

இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்..

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஆனால், பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கு குறித்தோ தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

மக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலும் சிலர், தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட விருப்பதாகவும், எந்தப் பணிகளுக்கு அனுமதி, எந்தப் பணிகளுக்கு எல்லாம் தடை விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக ஒரு புகைப்படத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT