தமிழ்நாடு

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா

DIN


சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிட்ட துரைமுருகனுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.  

நடந்து முடிந்த தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் துரைமுருகன். ஏற்கனவே, திமுக வேட்பாளர்களுக்கு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, தேர்தலுக்கு முன்பாகவே கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT