முகப்பு
தமிழ்நாடு

கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை: இன்று ஒரு சவரன் ரூ.34,760-க்கு விற்பனை

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
தங்கம் சவரனுக்கு ரூ.608 உயர்வு
பகிர்:


சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி மீண்டும் 34 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, ரூ.34,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து, ரூ.4,345 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.71,300 ஆகவும் விற்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →