தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த சிறுத்தை: தண்ணீரை வெளியேற்றி காப்பாற்றிய வனத்துறையினர்

DIN

குமுளி அருகே புலிகள் சரணாலயப் பகுதியையொட்டிய எஸ்டேட் கிணற்றில் விழுந்த சிறுத்தையை, வனத்துறையினர் கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றி காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்டனர்.

பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இருந்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமுளி 62 மைல் பகுதி எஸ்டேட்டில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை அதிகாலை சிறுத்தை ஒன்று  விழுந்துள்ளது.

கிணற்றடியில் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள் கிணற்றில் சென்று பார்த்தபோது, தண்ணீரில் சிறுத்தை தத்தளித்தக் கொண்டிருந்தது. 

இதுகுறித்து அவர்கள் உடனடியாக தேக்கடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் விரைவாக சம்பவ இடத்தக்கு வந்தனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் சிறுத்தையை வெளியேற்ற முடியவில்லை.

பின்னர் வனத்துறையினர் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, கூண்டு மூலம் சிறுத்தையை பிடித்தனர்.

பின்னர் அதை பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சுமார் 3 வயதுடைய ஆண் சிறுத்தைக்குட்டி புலிகள் சரணாலய வனத்திலிருந்து தவறி வந்திருக்கலாம்.

கிணற்றில் தண்ணீர் குடிக்க செல்கையில் தவறி விழுந்துள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT