தமிழ்நாடு

பள்ளிவாசல்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி தேவை: ஜவாஹிருல்லா

DIN


சென்னை: ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 10 மணிவரை செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14-இல் தொடங்கவிருக்கும் நிலையில், இந்தக் கட்டுப்பாட்டால் ரமலான் மாதத்தில் இரவு நேரத் தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக, பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவு நேரத் தொழுகையைப் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலை கொண்டனா்.

எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்குப் பதிலாக, இரவு 10 மணிவரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT