நீதிபதி முன் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி 
தமிழ்நாடு

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமை: நீதிபதி முன் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாகக் கூறி. நீதிபதி முன்பு கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாகக் கூறி. நீதிபதி முன்பு கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏற்கெனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி முன் ஆஜர்படுத்தபட்டார். 

அப்போது திடீரென சிறையில் தன்னை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாகக் கூறி அவர் கையில் வைத்திருந்த பிளேடால் நீதிபதி முன்பு கழுத்தை அறுத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பாகத் தான் கடிதம் எழுதி தருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்.

பின்னர்  சிகிச்சைக்காக கைதி பாண்டியனை  ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT