முகப்பு
தமிழ்நாடு

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது, தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. 

அதேபோன்று தமிழகத்திலிருந்து புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு செல்ல அனுமதியில்லை. 

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். 

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பாஸ் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →