உடையார்பாளையம் அருகே ஆட்டோ-ஆம்னி வேன் மோதல்: 2 பெண்கள் பலி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஆட்டோவுடம், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஆட்டோவுடம், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரியலூர் அருகேயுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர் தனது குடும்பத்தினருடன் உடையார்பாளையம் பெரிய கோயிலுக்குச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை வி.கைகாட்டியில் இருந்து ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
ஆட்டோவை சுண்டக்குடியைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது, ஜெயங்கொண்டத்திலிருந்து வந்த ஆம்னி வேன், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், மணிகண்டன் தாயார் சந்திரா(55), மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி பவுனம்மாள்(70) ஆகியோர் பலத்த காயமடைந்து அதேவிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டன், சிற்றரசு மற்றும் ஆம்னிவேனில் வந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த உடையார்பாளையம் கவால்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகவும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.