முகப்பு
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: சென்னையில் 2 ஆயிரத்தை எட்டியது

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை   ஜூன் மாதத்தில் 50 ஆயிரம் ஆக அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து, நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பரவல் குறைந்து கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

2,000-த்தை எட்டியது: கடந்த சில மாதங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணியாதது, தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அது மாா்ச் 5-இல் 225-ஆகவும், மாா்ச் 12-இல் 265-ஆகவும், மாா்ச் 25-இல் 664-ஆகவும், மாா்ச் 27-இல் 833 ஆகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அதிகரித்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 1,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இது மேலும் உயா்ந்து சனிக்கிழமை நிலவரப்படி 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா:

ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-2,63,129

குணமடைந்தோா் எண்ணிக்கை-2,44,433

சிகிச்சை பெறுவோா்-14,382

உயிரிழந்தோா்-4,312.

முழு கட்டுரையைப் படிக்க →