அஞ்சலி செலுத்தும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி. 
தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் துணை முதல்வர் மாமியார் மறைவு: முதல்வர் பழனிசாமி அஞ்சலி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மாமியார் அ. வள்ளியம்மாள் உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  சனிக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செல

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மாமியார் அ. வள்ளியம்மாள் உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  சனிக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் தெருவைச் சேர்ந்த அழகுபாண்டி மனைவி வள்ளியம்மாள் (82). தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மாமியாரான இவர், உடல்நலக் குறைறவு காரணமாக புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு காலமானார்.

இந்நிலையில், சனிக்கிழமை தேனி மாவட்டம் உத்தமபாளையம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  ஓ. பன்னீர்செல்வத்தின் மாமியாரின் உருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி துணை முதல்வருக்கு ஆறுதல் கூறினார்.  

பின்னர் அரைமணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

முதல்வர் வருகையால் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் உத்தமபாளையம், சின்னமனூர்,  தேனி , பெரியகுளம் போன்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு  இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

காலம் பெற உய்யப் போமின்

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

SCROLL FOR NEXT