முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
பகிர்:


சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக இன்று முதல் காற்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

தென் கேரளம் முதல் தெற்கு கொங்கள் வரை (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.04.2021: தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகம் மட்டுமின்றி தமிழக மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இன்று தமிழ்ப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.

கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில், வெப்பத்தைக் குறைத்து, மண்வாசனையைக் கூட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தன் பங்குக்கு மேகக் கூட்டங்களும் மழைத் துளியைத் தூவிச் சென்றுள்ளது.

மழை மேகங்களும் புத்தாண்டை வரவேற்பதாக சமூக தளங்களில், தங்கள் பகுதியில் மழை பெய்திருப்பது குறித்து பதிவு செய்து பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், கே.கே. நகர், மதுரவாயல், கோடம்பாக்கம், உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குன்றத்தூர், மணலி, புத்தாகரம்,  அனகாபுத்தூர், திருவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர் கிழக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் காலை 10.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்த நிலையில், 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

திடீரெனப் பெய்த மழையால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தபடி செல்வதைக் காண முடிந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →