தமிழ்நாடு

ராஜபாளையம்: திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

DIN


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  முன்விரோதம் காரணமாக திமுக  ஒன்றிய கவுன்சிலர், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அம்மையப்பன் என்பவரது மகன் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் திமுக 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியைச் சேர்ந்த  இளைஞர் கொலை வழக்கில்  முதல் குற்றவாளியாக  கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் வெளிவந்த அண்ணாமலை ஈஸ்வரன் இன்று சேத்தூர் கரையடி விநாயகர் கோவில் அருகே சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழியாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் முன்விரோதம் காரணமா?  என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

SCROLL FOR NEXT