கும்பக்கரை அருவியில் அதிக நீர்வரத்து: பாதுகாப்பற்ற நிலையில் பயணிகளுக்கு அனுமதி
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஆபத்தான நிலையில், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதியளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஆபத்தான நிலையில், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதியளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை அதிகாலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலாபயணிகள் அனுமதித்துள்ளதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் ப.இராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வருமானத்திற்காக ரூ.15 கட்டணமாக பெற்றுக் கொண்டு, அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளது ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.