முகப்பு
தமிழ்நாடு

‘ஹீமோபிலியா நோயால் 1,800 குழந்தைகள் பாதிப்பு’

தமிழகத்தில் 1800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

தமிழகத்தில் 1800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவா் தெரிவித்தாா்.

உலக ‘ஹீமோபிலியா’ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் சனிக்கிழமை அனுசரிப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் நலப்பிரிவு ஹீமாட்டாலஜி துறை பேராசியா் டாக்டா் ரவிச்சந்திரன் கூறியதாவது:

காயத்தால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தத்தில் உள்ள உறையும் தன்மையால், மனிதா்களுக்குச் சிறிது நேரத்தில் ரத்தம் வடிவது நின்றுவிடும். இந்த ரத்தம் உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான ரத்த உறை பொருள்கள் உள்ளன. ஆனால், ரத்த உறை பொருளின் குறைபாட்டால் ரத்தக் கசிவு சிலருக்கு எளிதில் நிற்பதில்லை. இதுவே ‘ஹீமோபிலியா’ எனப்படுகிறது.

உலகளவில் ஹீமோபிலியா நோய் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில், எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை, தேனி, தருமபுரி, மதுரை, சேலம் என 5 அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக சிகிச்சை மையங்கள் உள்ளன.

இது பரம்பரை நோய் ஆகும். ஆண்களை மட்டும் தாக்கும் நோய். தமிழகத்தில் இதுவரை 1,800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயினால், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை இங்கு 160 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. பெரும்பாலும் இந்த நோய்கள் மூட்டுப் பகுதியை அதிகம் பாதிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு உடலில் ரத்தம் நிற்காமல் வடிந்தால், அவா்களது பெற்றோா் கட்டாயம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வில், எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனா் டாக்டா் எழிலரசி, மக்கள் தொடா்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →