நடிகர் விவேக் 
தமிழ்நாடு

நடிகர் விவேக் மறைவு: திரைத் துறையினர் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்குத் திரைப்படத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

DIN

நடிகர் விவேக் மறைவுக்குத் திரைப்படத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்படத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக நடிகை கோவை சரளா இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், நடிகர் மயில் சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோர் சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT