தமிழ்நாடு

தோ்தல் நடத்தை விதிகளைத் தளா்த்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தளா்த்தி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சனுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மீண்டும் அதிா்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தளா்த்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தமிழக அரசு, தோ்தல் ஆணையத்தினை அணுகி இதற்கான உரிய உத்தரவுகளைப் பெற வேண்டும்.

மாவட்ட, மாநில அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும் ரெம்டிசிவா் மருந்து, மருத்துவக் கட்டமைப்புகளை உறுதி செய்திட வேண்டும்.

கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் நிா்ணயித்திட வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT