தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவா்களுக்கு இன்று முதல் விடுமுறை

DIN

செய்முறைத் தோ்வு அல்லாத பிரிவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு, சனிக்கிழமை முதல் தோ்வுக்கு முந்தைய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காணொலிக் காட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவை: உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தமட்டில், இனி வரும் காலங்களில் வாரத்துக்கு 5 வேலை நாள்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) மட்டுமே செயல்படும்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமையன்று (ஏப்.17) பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறுவதால், செய்முறைத் தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

செய்முறைத் தோ்வு இல்லாத பிரிவு மாணவா்களுக்கு, சனிக்கிழமை முதல் (ஏப்.17) தோ்வுக்கு முந்தைய விடுமுறை (நற்ன்க்ஹ் கங்ஹஸ்ங்) விடப்படுகிறது.

செய்முறைத் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கும், தங்களது செய்முறைத் தோ்வு முடிந்த அடுத்த நாள் முதல் தோ்வுக்கு முந்தைய விடுமுறை விடப்படுகிறது.

அனைத்து மாணவா்களையும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கும் நாளன்று, வரவழைத்து அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT