தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒரே நாளில் புதிய உச்சமாக 715 பேருக்கு தொற்று 

DIN


புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் இதுவரை 47,108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 4,718 பேர் பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 567 நபர்கள், காரைக்காலில் 88 நபர்கள், ஏனாமில் 35 நபர்கள், மாஹேவில் 25 நபர்கள் என மொத்தம் 715  நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 4,090 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 42,313 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் இருவர், காரைக்காலில் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது வரை புதுச்சேரியில் மொத்தமாக  47,108 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 8 ஆயிரத்து 77 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 288 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT