வேலூர் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவரது பட்டாசுக் கடையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மத்திய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பெயரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.