கட்டுப்பாடுகளுடன் திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி
திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.