முகப்பு
தமிழ்நாடு

ஞாயிறன்று உணவகங்களில் பார்சல் சேவைக்கு(குறிப்பிட்ட நேரம்) மட்டும் அனுமதி

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. 

இதில், முழு ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

Advertisement

அதிலும் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக (இ-காமர்ஸ்) நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments